குறள் 1163

படர்மெலிந்திரங்கல்

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து

kaamamum naanum uyirkaavaath thoongkumyen
nonaa udampin akaththu


Shuddhananda Bharati

Wailing of pining love

In life - poles of this wearied frame
Are poised the weights of lust and shame.


GU Pope

Complainings

My soul, like porter's pole, within my wearied frame,
Sustains a two-fold burthen poised, of love and shame.

(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.


Mu. Varadarajan

துன்பத்தைப்‌ பொறுக்காமல்‌ வருந்துகின்ற என்‌ உடம்பினிடத்தில்‌ உயிரே காவடித்தண்டாகக்‌ கொண்டு காமநோயும்‌ நாணமும்‌ இருபக்கமும்‌ தொங்குகின்றன.


Parimelalagar

இதுவும் அது. காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன.
விளக்கம்:
(பொறாமை மெலிவானாயது. 'தூங்கும்' என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் தூங்கா நின்றன; பொறுக்கமாட்டாத என்னுடம்பினுள்ளே நின்று, (எ - று.) இது தலைமகள் மனநிகழ்ச்சி யிதுவென்று கூறியது.