குறள் 1162

படர்மெலிந்திரங்கல்

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

karaththalum aatrraenindh noyainoi seithaarkku
uraiththalum naanuth tharum


Shuddhananda Bharati

Wailing of pining love

I can't conceal this nor complain
For shame to him who caused this pain.


GU Pope

Complainings

I cannot hide this pain of mine, yet shame restrains
When I would tell it out to him who caused my pains.

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.


Mu. Varadarajan

இக்‌ காமநோயைப்‌ பிறர்‌ அறியாமல்‌ முற்றிலும்‌ மறைக்கவும்‌ முடியவில்லை; நோய்‌ செய்த காதலர்க்குச்‌ சொல்வதும்‌ நாணம்‌ தருகின்றது.


Parimelalagar

'ஈண்டையார் அறியாமல் மறைத்தல், ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது.) இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது; இனி என் செய்கோ?
விளக்கம்:
(ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பத பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத்தரும்' என்றும் கூறினாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்; இந்நோயைச் செய் தார்க்குச் சொல்லவும் நாணயாக நின்றது,
(என்றவாறு). இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது,