குறள் 1161

படர்மெலிந்திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்

maraippaenman yaanikhtho noyai iraippavarkku
ootrruneer pola mikum


Shuddhananda Bharati

Wailing of pining love

It swells out like baled out spring
How to bear this pain so writhing?


GU Pope

Complainings

I would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells.

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.


Mu. Varadarajan

இக்‌ காமநோயைப்‌ பிறர்‌ அறியாமல்‌ யான்மறைப்பேன்‌; ஆனால்‌,இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர்‌ மிகுவது போல்‌ மிகுகின்றது.


Parimelalagar

'காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது', என்ற தோழிக்குச் சொல்லியது. நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகு‘மறு போல மிகாநின்றது.
விளக்கம்:
('அம்மறைத்தலால் பயன் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ''இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்'' என்புழிப்போல, ஈண்டு சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அடு பாடமின்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.)


Manakkudavar

படர்மெலிந்திரங்கலாவது தலைமகள் தலைமகன் பிரிந்துழிக் கதுமென உற்ற துன்பத்தினால் மெலிந்திரங்குதல். பிரிந்துழியுற்ற துன்பமாவது போனா னென்று கேட்ட காலத்து வருவதோர் மனநிகழ்ச்சி. இது பிரியப்பட்டார்க்கு முற்பாடு தோன்றுமாதலான், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) இந் நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும், இஃது இறைப்பார்க்கு ஊற்று நீர் போல மிகாநின்றது,
(என்றவாறு). தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகா தென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.