குறள் 1149

அலரறிவுறுத்தல்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

alarnaana olvatho anjchalompu yenraar
palarnaana neeththak katai


Shuddhananda Bharati

Public clamour

Who said "fear not" flared up rumour
Why then should I blush this clamour?


GU Pope

The Announcement of the Rumour

When he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?

When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.


Mu. Varadarajan

அஞ்சவேண்டா என்று அன்று உறுதி கூறியவர்‌ இன்று பலரும்‌ நாணும்படியாக நம்மைவிட்டுப்‌ பிரிந்தால்‌, அதனால்‌ அலருக்கு நாணியிருக்க முடியுமோ?


Parimelalagar

வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள், அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றன் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்டஞான்று 'நின்னிற்பிரியேன்; அஞ்சல் ஓம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாண ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.
விளக்கம்:
('நாண்' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையுமாய யாம் நாணுதல் யாண்டையது?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து,
(என்றவாறு). பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.