குறள் 1148

அலரறிவுறுத்தல்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்

naeiyaal yerinuthuppaem yenratrraal kelavaiyaal
kaamam nuthuppaem yenal


Shuddhananda Bharati

Public clamour

To quench the lust by rumour free
Is to quench fire by pouring ghee.


GU Pope

The Announcement of the Rumour

With butter-oil extinguish fire! 'Twill prove
Harder by scandal to extinguish love.

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee.


Mu. Varadarajan

அலர்‌ கூறுவதால்‌ காமத்தை அடக்குவோம்‌ என்று முயலுதல்‌, நெய்யால்‌ நெருப்பை அவிப்போம்‌ என்று முயல்வதைப்‌ போன்றது.


Parimelalagar

இதுவும் அது. கெளவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.
விளக்கம்:
(மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத் தாற்போலும் ; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல்,
(என்றவாறு). இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமைகண்டு தோழி கூறியது.