குறள் 1146

அலரறிவுறுத்தல்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

kandathu mannum orunaal alarmannum
thingkalaip paampukon datrru


Shuddhananda Bharati

Public clamour

One lasting day we met alone
Lasting rumours eclipse our moon.


GU Pope

The Announcement of the Rumour

I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.


Mu. Varadarajan

காதலரைக்‌ கண்டது ஒருநாள்தான்‌; அதனால்‌ உண்டாகிய அலரோ, திங்களைப்‌ பாம்பு கொண்டசெய்தி போல்‌ எங்கும்‌ பரந்து விட்டது.


Parimelalagar

இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது. கண்டது ஒருநாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று - அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.
விளக்கம்:
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும், என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) யான் கண்ணுற்றது. ஒருநாள் ; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல், எல்லாரானும் அறியப்பட்டு அலராகாநின்றது,
(என்றவாறு).