Kural 1145
குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
kaliththorum kallundal vaetdatrraal kaamam
vaelippadundh thorum inithu
Shuddhananda Bharati
Drink delights as liquor flows
Love delights as rumour grows.
GU Pope
The Announcement of the Rumour
The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me!
As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me wheneverit is the subject of rumour.
Mu. Varadarajan
காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
Parimelalagar
இதுவும் அது. களித் தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது.
விளக்கம்:
('வேட்கப்பட்டற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போல, காமமும் அலராகுந்தோறும் இனிதாகும்,
(என்றவாறு). இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி, நுமக்குத் துன்பமாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.