குறள் 1144

அலரறிவுறுத்தல்

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

kavvaiyaal kavvithu kaamam athuvinrael
thavvaennum thanmai ilandhthu


Shuddhananda Bharati

Public clamour

Rumour inflames the love I seek
Or else it becomes bleak and weak.


GU Pope

The Announcement of the Rumour

The rumour rising makes my love to rise;
My love would lose its power and languish otherwise.

Rumour increases the violence of my passion; without it, it would grow weak and waste away.


Mu. Varadarajan

எம்‌ காமம்‌ ஊரார்‌ சொல்லுகின்ற அலரால்‌ வளர்வதாயிற்று; அந்த அலர்‌ இல்லையானால்‌ அது தன்‌ தன்மை இழந்து சுருங்கிப்‌ போய்விடும்‌.


Parimelalagar

இதுவும் அது. காமம் கவ்வையாற கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
விளக்கம்:
(அலர்தல்: மேன்மேல் மிகுதல்.செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்வு: இன்பம் பயத்தல். 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி; 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப''
விளக்கம்:
(நெடுநல். 184-185) என்புழியும் அது.)


Manakkudavar

(இதன் பொருள்) அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம் ; அவ்வலரில்லை யாயின், தனது தன்மை யிழந்து பொலிவழியும்,
(என்றவாறு). செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போல், கவ்வையுடைய தனைக் கல்விது என்றார்.