குறள் 1143

அலரறிவுறுத்தல்

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

uraaatho oorarindhtha kelavai athanaip
paeraaathu paetrranna neerththu


Shuddhananda Bharati

Public clamour

I profit by this public rumour
Having not, I feel, I have her.


GU Pope

The Announcement of the Rumour

The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).


Mu. Varadarajan

ஊரார்‌ எல்லாரும்‌ அறிந்துள்ள அலர்‌ நமக்குப்‌ பொருந்தாதோ? (பொருந்தும்‌. அந்த அலர்‌ பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. ஊர் அறிந்த கெளவை உறாஅதோ-எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான்.
விளக்கம்:
(பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாத தொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும்,
(என்றவாறு). இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமாாவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.