குறள் 1141

அலரறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

alaraela aaruyir nitrkum athanaip
palarariyaar paakkiyath thaal


Shuddhananda Bharati

Public clamour

* Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved. The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs. The parents of the lovers first reproach them and then consent to their marriage.

Rumour sustains my existence
Good luck! many know not its sense.


GU Pope

The Announcement of the Rumour

By this same rumour's rise, my precious life stands fast;
Good fortune grant the many know this not!

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.


Mu. Varadarajan

(எம்‌ காதலைப்‌ பற்றி) அலர்‌ எழுவதால்‌ அரிய உயிர்‌ போகாமல்‌ நிற்கின்றது; எம்‌ நல்வினைப்‌ பயனால்‌ அதைப்‌ பலரும்‌ அறியாமலிருக்கின்றனர்‌.


Parimelalagar

அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகளைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவள் சொல்லியது. அலர் எழ ஆர் உயிர் நிற்கும் - மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலாராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானை அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
விளக்கம்:
(அல்ல குறிப்பிட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும், அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம்; ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான், என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)


Manakkudavar

அலரறிவுறுத்தலாவது இவ்வாறு ஒழுகும் ஒழுக்கத்தினால் வந்த அவரைத் தலைமகள் தோழிக்கு அறிவித்தலும் தோழி தலைமகட்கும் தலைமகற்கும் அறியவித்தலு மாம். நாணுத் துறவுரைத்து இரவுக்குறி யொழுகாநின்ற தலை க னுக்குத் தோழி அம்பலம் அலரும் ஆகாநின்றனவென் றறிவித்தலான், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும் ; அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்; அறிவராயின், எமக்கு ஏதிலராய் அலர் தூற்றுவார் இவள் இறந்துபடவேண்டும் மென்று தூற்றார்,
(என்றவாறு).