குறள் 1139

நாணுத்துறவுரைத்தல்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

arikilaar yellaarum yenraeyen kaamam
marukin marukum marundu


Shuddhananda Bharati

Decorum defied

My perplexed love roves public street
Believing that none knows its secret.


GU Pope

The Abandonment of Reserve

'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).


Mu. Varadarajan

அமைதியாய்‌ இருந்ததால்‌ எல்லாரும்‌ அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம்‌ தெருவில்‌ பரவி மயங்கிச்‌ சுழல்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர்; இனி அவ்வாறு நில்லாது யானை வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர்மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.
விளக்கம்:
(மயங்குதல் அம்பலாதல்; மறுகுதல்; அலராதல். 'அம்பலும் அலருமாயிற்று. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம். 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னை யொழிந்த எல்லாரும் அறிவில் ரென்றே சொல்லி, என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது, (-). சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.