குறள் 1137

நாணுத்துறவுரைத்தல்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்

kadalanna kaamam ulandhthum madalaeraap
paennin paerundhthakka thil


Shuddhananda Bharati

Decorum defied

Her sea-like lust seeks not Madal!
Serene is woman's self control.


GU Pope

The Abandonment of Reserve

There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm'.

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.


Mu. Varadarajan

கடல்போன்ற காமநோயால்‌ வருந்தியும்‌, மடலேறாமல்‌ துன்பத்தைப்‌ பொறுத்துக்கொண்டிருக்கும்‌ பெண்‌ பிறப்பைப்‌ போல்‌ பெருமையுடைய பிறவி இல்லை.


Parimelalagar

'பேதைக்கு என் கண் படல் ஒல்லா,' என்பது பற்றி, 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்' என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.
விளக்கம்:
('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது; நீ அஃது அறிகின்றிலை,' என்பதாம். இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல் மேம்பட்டது இல்லை,
(என்றவாறு). இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்தமொக்கும்; பெண் டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற் றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.