Kural 1136
குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்
madaloorthal yaamaththum ulluvaen manra
padalollaa paethaikken kan
Shuddhananda Bharati
Madal I ride at midnight for
My eyes sleep not seeing this fair.
GU Pope
Of climbing ‘horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid.
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.
Mu. Varadarajan
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்; காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
Parimelalagar
'மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது.) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலை பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன்.
விளக்கம்:
('பேதை' என்றது பருவம் பற்றி அன்று; மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) போதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது ; ஆத லானே , மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்,
(என்றவாறு). இது மடலேறுவது நாளையன்றே ; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு, என் கண் உறங்காது; ஆதலான், மறவேனென்று தலைமகன் கூறியது.