குறள் 1134

நாணுத்துறவுரைத்தல்

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

kaamak kadumpunal uikkum naanodu
nallaanmai yennum punai


Shuddhananda Bharati

Decorum defied

Rushing flood of love sweeps away
The raft of shame and firmness, aye!


GU Pope

The Abandonment of Reserve

Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.

The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.


Mu. Varadarajan

நாணமும்‌ நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக்‌ காமம்‌ என்னும்‌ கடுமையான வெள்ளம்‌ அடித்துக்‌ கொண்டு போய்‌ விடுகின்றது.


Parimelalagar

நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின், அதனால் 'அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற் பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது.
விளக்கம்:
(அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் மாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்ற து,
(என்றவாறு).