Kural 1133
குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
naanodu nallaanmai pandutaiyaen inrutaiyaen
kaamutrraar yaerum madal
Shuddhananda Bharati
Once I was modest and manly
My love has now Madal only.
GU Pope
I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'.
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the
Mu. Varadarajan
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; (காதலியைப் பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
Parimelalagar
'நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது. நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்;
விளக்கம்:
(காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். நாண்: இழிவாயின செய்தற் கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன; இன்று உள்ளது இதுவேயாகலின், கடிதின் முடியும்,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடை யேன் ; காமமிக்கார் ஏறும் (மடலினை இன்றுடையேனானேன்,
(என்றவாறு).