குறள் 1132

நாணுத்துறவுரைத்தல்

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

nonaa udampum uyirum madalaerum
naaninai neekki niruththu


Shuddhananda Bharati

Decorum defied

Pining body and mind lose shame
And take to riding of the palm.


GU Pope

The Abandonment of Reserve

My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the ‘horse of palm’.

Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.


Mu. Varadarajan

(காதலியன்‌ பிரிவால்‌ ஆகிய துன்பத்தைப்‌) பொறுக்காத என்‌ உடம்பும்‌ உயிரும்‌, நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு மடலூரத்‌ துணிந்தன.


Parimelalagar

'நாணுடைய நுமக்கு அது முடியாது,' என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது. நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாதா உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன, நாணினை நீக்கி நிறுத்து.
விளக்கம்:
('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், அதனை விலக்குவதாய நாணினை அகற்றி, செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகு பெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. 'அதுவும் இது பொழுது நீங்கிற்று' என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதான் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற் குறை நேர்தல் நோக்கி.)


Manakkudavar

(இதன் பொருள்) பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும் ; நாணினை நீக்கி நின்று ,
(என்றவாறு). இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது.