குறள் 1130

காதற்சிறப்புரைத்தல்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்

uvandhthuraivar ullaththul yenrum ikandhthuraivar
yaethilar yennumiv voor


Shuddhananda Bharati

Love's excellence

He abides happy in my heart
But people mistake he is apart.


GU Pope

Declaration of Love's special Excellence

Rejoicing in my very soul he ever lies;
'Her love estranged is gone far off!' the village cries.

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore)dwells afar.


Mu. Varadarajan

காதலர்‌ எப்போதும்‌ என்‌ உள்ளத்தில்‌ மகிழ்ந்து வாழ்கின்றார்‌; ஆனால்‌ அதை அறியாமல்‌ பிரிந்து வாழ்கின்றார்‌; அன்பில்லாதவர்‌' என்று இந்த ஊரார்‌ அவரைப்‌ பழிப்பர்‌.


Parimelalagar

இதுவும் அது. என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர், என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
விளக்கம்:
('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லாநின்றது. இவ்வூர், (எ-று). தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின் மேல் வைத்துக் கூறியது.