குறள் 1129

காதற்சிறப்புரைத்தல்

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்

imaippin karappaakku arival anaiththitrkae
yaethilar yennumiv voor


Shuddhananda Bharati

Love's excellence

My eyes wink not lest he should hide
And him as cruel the townsmen chide.


GU Pope

Declaration of Love's special Excellence

I fear his form to hide, nor close my eyes:
‘Her love estranged is gone'' the village cries.

Twill not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this townsays, he is unloving.


Mu. Varadarajan

கண்‌ இமைத்தால்‌ காதலர்‌ மறைந்துபோதலை அறிகின்றேன்‌. அவ்வளவிற்கே இந்த ஊரார்‌ அவரை அன்பில்லாதவர்‌ என்று சொல்லுவர்‌.


Parimelalagar

வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது. இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்தற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
விளக்கம்:
(தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கண்ணிமைக்குமாயின், அவரொளிக்கு மது யானறிவேன், அவ் வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன்,
(என்றவாறு). இது கண் துயிலமரத்தலென்னும் மெய்ப்பாடு.