குறள் 1128

காதற்சிறப்புரைத்தல்

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து

naenjchaththaar kaatha lavaraaka vaeithundal
anjsuthum vaepaak karindhthu


Shuddhananda Bharati

Love's excellence

My lover abides in my heart
I fear hot food lest he feels hot.


GU Pope

Declaration of Love's special Excellence

Within my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn.

As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.


Mu. Varadarajan

எம்‌ காதலர்‌ நெஞ்சினுள்‌ இருக்கின்றார்‌; ஆகையால்‌ சூடான பொருளை உண்டால்‌ அவர்‌ வெப்பமுறுதலை எண்ணிச்‌ சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்‌


Parimelalagar

இதுவும் அது காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
விளக்கம்:
('எப்பொழுதும் எம் நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை?' என்பது குறிப்பெச்சம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம் நெஞ்சத்தி லிருக்கின்றார்; ஆத லானே, வெய்தாக வுண்டலை அஞ்சா நின்றோம்; அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது காரணத்து உறவு உரைத்தல்.