குறள் 1127

காதற்சிறப்புரைத்தல்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

kannullaar kaatha lavaraakak kannum
yeluthaem karappaakku arindhthu


Shuddhananda Bharati

Love's excellence

My lover in my eyes abides
I paint them not lest he hides.


GU Pope

Declaration of Love's special Excellence

My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.


Mu. Varadarajan

எம்‌ காதலர்‌ கண்ணினுள்‌ இருக்கின்றார்‌, ஆகையால்‌, மை எழுதினால்‌ அவர்‌ மறைவதை எண்ணிக்‌ கண்ணுக்கு மையும்‌ எழுதமாட்டோம்‌!


Parimelalagar

இதுவும் அது. காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எங்காதலவர் கண்ணுள்ளார்; ஆதலானே, கண்ணும் மையெழு தேம் ; அவர் ஒளித்தலை யறிந்து,
(என்றவாறு). எப்பொழுதும் நோக்கியிருத்தலால், கோலஞ் செய்தற்குக் காலம் பெற்றிலே னென் றவா றாயிற்று.