Kural 1123
குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
karumaniyitr paavaainee pothaayaam veelum
thirunuthatrku illai idam
Shuddhananda Bharati
Depart image in my pupil
Giving room to my fair-browed belle!
GU Pope
Declaration of Love's special Excellence
For her with beauteous brow, the maid I love, there place is none;
To give her image room, O pupil of mine eye, begone!
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.
Mu. Varadarajan
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!
Parimelalagar
இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது. கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின் கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம்.
விளக்கம்:
('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின். நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) என் கண்ணும் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போது வாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது, (எ - று.