Kural 1122
குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
udampodu uyiritai yennamatr ranna
madandhthaiyodu yemmitai natpu
Shuddhananda Bharati
Love between me and this lady
Is like bond between soul and body.
GU Pope
Declaration of Love's special Excellence
Between this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind.
The love between me and this damsel is like the union of body and soul.
Mu. Varadarajan
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
Parimelalagar
பிரிவு அச்சம் கூறியது. உடம்பொடு உயிரிடை என்ன அன்ன-உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். 'என்ன' எனப்பன்மையாற் கூறியது, இரண்டும தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்ப துன்பங்கள்
விளக்கம்:
(ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அது பொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே? ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்?' எனவும், 'இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்?' எனவும் அவள் மனத்தின்கண் நிகழும்; அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்)உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன் மைத்து ; மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு,
(என்றவாறு). நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.