குறள் 1119

நலம்புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

malaranna kannaal mukamoththi yaayin
palarkaanath thonral mathi


Shuddhananda Bharati

Beauty extolled

Like the face of my flower-eyed one
If you look, then shine alone O moon!


GU Pope

The Praise of her Beauty

If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!

O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.


Mu. Varadarajan

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால்‌, நீ பலரும்‌ காணும்படியாகத்‌ தோன்றாதே.


Parimelalagar

இதுவும் அது. மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத்தோன்று; பலர் காணத் தோன்றாதொழி.
விளக்கம்:
(தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக,
(என்றவாறு). இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும், குணத்தினாலே ஒவ்வாதென்றது.