குறள் 1118

நலம்புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

maathar mukampol olivida vallaiyael
kaathalai vaali mathi


Shuddhananda Bharati

Beauty extolled

Like my lady's face if you shine
All my love to you; hail O moon!


GU Pope

The Praise of her Beauty

Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving?


Mu. Varadarajan

திங்களே! இம்‌ மாதரின்‌ முகத்தைப்போல்‌ ஒளி வீச உன்னால்‌ முடியுமானால்‌, நீயும்‌ இவள்போல்‌ என்‌ காதலுக்கு உரிமை பெறுவாய்‌.


Parimelalagar

இதுவும் அது. மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல் ஒளி விடவில்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும்வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி.
விளக்கம்:
('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்,' என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)


Manakkudavar

(இதன் பொருள்) மதியே! நீ இம்மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையாயின், நீயும் எம்மாற் காதலிக்கப்படுத்தி,
(என்றவாறு). வாழி - அசை. இது மறுப்போயின தாய முகமென்று கூறப்பட்டது.