Kural 1112
குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
malarkaanin maiyaaththi naenjsae ivalkan
palarkaanum poovokkum yenru
Shuddhananda Bharati
You can't liken flowers by many eyed,
To her bright eyes, O mind dismayed.
GU Pope
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole!
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
Mu. Varadarajan
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்!
Parimelalagar
இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளைநீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்; நின்அறிவு இருந்தவாறென்? மையாத்தல்; ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.
Manakkudavar
(இதன் பொருள்) நெஞ்சே! நீ இவள்கண் மலராயினும் பலரால் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்ட பொழுதே மயங்கா நின்றாய்,
(என்றவாறு). இது கண் பூவினது நிறமொக்குமாயினும், குண்மொவ்வாதென்று கூறிற்று.