Kural 1111
குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
nanneerai vaali anichchamae ninninum
maenneeral yaamveel paval
Shuddhananda Bharati
Soft blessed anicha flower, hail
On whom I dote is softer still.
GU Pope
O flower of the sensitive plant! than thee
More tender's the maiden beloved by me.
May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.
Mu. Varadarajan
அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்.
Parimelalagar
இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. அனிச்சமே வாழிநன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக; மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள்.
விளக்கம்:
(அனிச்சம்: ஆகுபெயர். 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
Manakkudavar
நலம்புனைந்துரைத்தலாவது தலைமகளது நலத்தினை அலங்கார வகையாய்க் கூறுதல். புனைந்துரை எனினும், பாராட்டெனினும், கொண்டாட் டெனினும், மகிழ்ச்சியெனினும் ஒக்கும். (இதன் பொருள்) அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையள் ; காண்,
(என்றவாறு). இஃது உடம்பினது மென்மை கூறிற்று.