குறள் 1090

தகையணங்குறுத்தல்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

untaarkan allathu adunaraak kaamampol
kantaar makilseithal inru


Shuddhananda Bharati

Beauty's dart

To the drunk alone is wine delight
Nothing delights like love at sight.


GU Pope

Mental Disturbance caused by the Beauty of the Princess

The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see!

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.


Mu. Varadarajan

கள்‌, தன்னை உண்டவரிடத்தில்‌ அல்லாமல்‌ காமத்தைப்‌ போல்‌ தன்னைக்‌ கண்டவரிடத்தில்‌ மயக்கத்தை உண்டாக்குவதில்லை


Parimelalagar

தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது. அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று.
விளக்கம்:
(அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அது பெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. ''அரிமயிர் திரள் முன்கை'' (புறநா. 11) என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.)


Manakkudavar

(இதன் பொருள்) அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று,
(என்றவாறு). இது தலைமகள் தலைமகனைக்கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.