Kural 1089
குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து
pinaiyaer madanokkum naanum utaiyaatku
aniyaevano yaethila thandhthu
Shuddhananda Bharati
Which jewel can add to her beauty
With fawn-like looks and modesty?
GU Pope
Mental Disturbance caused by the Beauty of the Princess
Like tender fawn's her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?
Mu. Varadarajan
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?
Parimelalagar
அணிகலத்தானாய வருத்தம் கூறியது. பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான்பிணைஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து ?
விளக்கம்:
(மடநோக்கு - வெருவுதல் உடைய நோக்கு. 'இவட்குப் - பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) பிணையை யொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணி னையும் உடையவட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவைதாடே அமையும்,
(என்றவாறு). இது தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.