குறள் 1088

தகையணங்குறுத்தல்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

onnuthatr koao utaindhthathae gnyaatpinul
nannaarum utkumaen peedu


Shuddhananda Bharati

Beauty's dart

Ah these fair brows shatter my might
Feared by foemen yet to meet.


GU Pope

Mental Disturbance caused by the Beauty of the Princess

Ah! woe is me! my might, That awed my foemen in the fight,
By lustre of that beaming brow Borne down, lies broken now!

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.


Mu. Varadarajan

போரக்களத்தில்‌ பகைவரும்‌ அஞ்சுதற்குக்‌ காரணமான என்‌ வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத்‌ தோற்று அழிந்ததே!


Parimelalagar

நுதலினாய வருத்தம் கூறியது. ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்துவிட்டது.
விளக்கம்:
('மாதர்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதனால், பகைவராதல் பெற்றாம். 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) இவ்வெள்ளிய நுதற்கு மிகவும் கெட்டது, போரின் கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி,
(என்றவாறு). இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலநோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.