குறள் 1085

தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

kootrramo kanno pinaiyo madavaral
nokkamim moonrum utaiththu


Shuddhananda Bharati

Beauty's dart

Is it death, eye or doe? All three
In winsome woman's look I see.


GU Pope

Mental Disturbance caused by the Beauty of the Princess

The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?
Or fawn's shy glance? All three appear In form of maiden here.

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?


Mu. Varadarajan

எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம்‌ பெண்ணின்‌ பார்வை இந்த மூன்றன்‌ தன்மையும்‌ உடையதாக இருக்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமை யான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ; அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.
விளக்கம்:
(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில் பற்றி வந்த ஐயநிலை உவமம்.)


Manakkudavar

(இதன் பொருள்) சொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ ? நெவ தலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து,
(என்றவாறு). இக் கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ் செய்வதன் முன்னே அதனைக்கோடி மறைத்ததாயினும், அஃது அதனைக் கடத்தலும் உடையது; அதனால், அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.