குறள் 1083

தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

pandariyaen kootrraen pathanai iniyarindhthaen
paendakaiyaal paeramark katdu


Shuddhananda Bharati

Beauty's dart

Not known before - I spy Demise
In woman's guise with battling eyes.


GU Pope

Mental Disturbance caused by the Beauty of the Princess

Death's form I formerly Knew not; but now ‘tis plain to me;
He comes in lovely maiden's guise, With soul-subduing eyes.

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with(the help of) female qualities.


Mu. Varadarajan

எமன்‌ என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்‌; இப்பொழுது கண்டறிந்தேன்‌; அது பெண்‌ தன்மையுடன்‌ போர்‌ செய்யும்‌ பெரிய கண்களை உடையது.


Parimelalagar

இதுவும் அது. கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
விளக்கம்:
(பெண்தகை: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டெனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)


Manakkudavar

(இ-ள்.) பண்டு கூற்றின் வடிவு இன்ன பெற்றிததென்பதை அறியேன்; இப் பொழுது அறிந்தேன்; அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து,
(என்றவாறு). இது நம்மை வருத்துதற்குத் தக்காளென்னுங் குறிப்பு.