Kural 1082
குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
nokkinaal nokkethir nokkuthal thaakkanangku
thaanaikkon danna thutaiththu
Shuddhananda Bharati
The counter glances of this belle
Are armied dart of the Love-Angel.
GU Pope
Mental Disturbance caused by the Beauty of the Princess
She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band.
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contendagainst me.
Mu. Varadarajan
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையயும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
Parimelalagar
மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என்நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற்போலும் தன்மையை உடைத்து.
விளக்கம்:
(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல் என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல் வரும் தானையைக் கொண்டுவந்தது போலும்.
(என்றவாறு). தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்ட தனால் வருத்த மிக்கது கூறியது.