Kural 1081
குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
anangkukol aaimayil kollo kanangkulai
maatharkol maalumyen naenjsu
Shuddhananda Bharati
Is it an angel? A fair peacock
Or jewelled belle? To my mind a shock!
GU Pope
Mental Disturbance caused by the Beauty of the Princess
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind!
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.
Mu. Varadarajan
தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!
Parimelalagar
தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது. கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர் கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது.
விளக்கம்:
(ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற்சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். கனங்குழை: ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும் தன் வருத்தமும் பற்றி, 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும்பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினான்.)
Manakkudavar
தகையணங்குறுத்தலாவது மைந்தர்க்கும் மகளிர்க்கும் கல்வியினானாகிய இன் பப்பகுதி கூறுதல். அஃதெங்ஙனங் கூறினாரெனின், ஒருவனுக்கு இன்பங் கலத் தற்கிடம் கன்னியரும் கணிகையரும், பிறர் தாரமுமென மூவகையல்லதில்லை ; அவற்றுள், பிறர்மனைக் கூட்டம் பாவந் தருமென்று அறத்துப்பாலுட் கூறிக் கணிகையர் கூட்டம் பொருட்கேடு தருமென்று பொருட்பாலிற் கூறினாராத லின், அறனும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கன்னியர் கூட்ட மென்றாரென்பது. (இதன் பொருள்) இக் கனங்குழையை யுடையாள் தெய்வங் கொல்லோ ? நல்ல தோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் பயங்கா நின்றவற்றுள் யாதோ?
(என்றவாறு)