குறள் 1080

கயமை

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து

yetrritr kuriyar kayavaronru utrrakkaal
vitrratrku uriyar viraindhthu


Shuddhananda Bharati

Meanness

The base hasten to sell themselves
From doom to flit and nothing else.


GU Pope

Baseness

For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else arethey fitted ?


Mu. Varadarajan

கயவர்‌ எதற்கு உரியவர்‌? ஒரு துன்பம்‌ வந்தடைந்த காலத்தில்‌ அதற்காகத்‌ தம்மைப்‌ பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர்‌ ஆவர்‌.


Parimelalagar

கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக் கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேற எத்தொழிற்கு உரியர்?
விளக்கம்:
(உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும். கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒகு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம் பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லர்,
(என்றவாறு). இது நிலையில் சென்றது. குடியியல் முற்றிற்று & பொருட்பால் முற்றிற்று.