குறள் 1079

கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

uduppathooum unpathooum kaanin pirarmael
vadukkaana vatrraakum keel


Shuddhananda Bharati

Meanness

Faults in others the mean will guess
On seeing how they eat and dress.


GU Pope

Baseness

If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good foodand clothing.


Mu. Varadarajan

கீழ்மகன்‌ பிறர்‌ உடுப்பதையும்‌ உண்பதையும்‌ கண்டால்‌ அவர்மேல்‌ பொறாமைகொண்டு, வேண்டும்‌ என்றே குற்றம்‌ காண வல்லவனாவான்‌.


Parimelalagar

உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காணவற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம்.
விளக்கம்:
(உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில் மேல் நின்றன; அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப்படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)


Manakkudavar

(இ-ள்.) பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர் மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர்,
(என்றவாறு). இஃது அழுக்காறுடையா ரென்றது.