குறள் 998

பண்புடைமை

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை

nanpaatrraar aaki nayamila seivaarkkum
panpaatrraar aathal katai


Shuddhananda Bharati

Courtesy

Discourtesy is mean indeed
E'en to a base unfriendly breed.


GU Pope

Courtesy

Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.

It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing nofriendship (for them) do only what is hateful.


Mu. Varadarajan

நட்புக்‌ கொள்ள முடியாதவராய்த்‌ தீயவை செய்கின்றவரிடத்திலும்‌ பண்பு உடையவராய்‌ நடக்க முடியாமை இழிவானதாகும்‌.


Parimelalagar

நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார் மாட்டும்; பண்பு ஆற்றராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம்.
விளக்கம்:
(நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகு வார்மாட்டும் தாம் பண்புடையரா யொழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.