குறள் 996

பண்புடைமை

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்

panputaiyaarp patdundu ulakam athuinrael
manpukku maaivathu man


Shuddhananda Bharati

Courtesy

The world rests with the mannered best
Or it crumbles and falls to dust.


GU Pope

Courtesy

The world abides; for 'worthy' men its weight sustain.
Were it not so, 'twould fall to dust again.

The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.


Mu. Varadarajan

பண்பு உடையவரிடத்தில்‌ பொருந்தியிருப்பதால்‌ உலகம்‌ உள்ளதாய்‌ இயங்குகின்றது; அஃது இல்லையானால்‌ மண்ணில்‌ புகுந்து அழிந்துபோகும்‌.


Parimelalagar

பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம்.
விளக்கம்:
('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர். மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பது பட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும், அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது; ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின் கட் புக்கு மாய்ந்து போவதாம்,
(என்றவாறு).