குறள் 995

பண்புடைமை

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

nakaiyullum innaa thikalchi pakaiyullum
panpula paadarivaar maatdu


Shuddhananda Bharati

Courtesy

The courteous don't even foes detest
For contempt offends even in jest.


GU Pope

Courtesy

Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.

Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit(pleasing) qualities even when they are hated.


Mu. Varadarajan

ஒருவனை இகழ்ந்து பேசுதல்‌ விளையாட்டிலும்‌ துன்பம்‌ தருவதாகும்‌; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில்‌ பகைமையிலும்‌ நல்ல பண்புகள்‌ உள்ளன.


Parimelalagar

இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
விளக்கம்:
('பாடறிவார்' எனவே, அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; ஆகலாம் பிறர் பாடறிந் தொழுகுவார் மாட்டுப் பகைமையுள்வழியும் அஃதுளதா காது இனிய வாய பண்புகளே உளவாவன.