குறள் 994

பண்புடைமை

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு

nayanodu nanri purindhtha payanutaiyaar
panpupaa raatdum ulaku


Shuddhananda Bharati

Courtesy

The world applauds those helpful men
Whose actions are just and benign.


GU Pope

Courtesy

Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence.'

The world applauds the character of those whose usefulness results from their equity and charity.


Mu. Varadarajan

நீதியையும்‌ நன்மையையும்‌ விரும்பிப்‌ பிறர்க்குப்‌ பயன்‌ பட வாழும்‌ பெரியோரின்‌ நல்ல பண்பை உலகத்தார்‌ போற்றிக்‌ கொண்டாடுவர்‌.


Parimelalagar

நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர்.
விளக்கம்:
('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு, நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், 'அதனைப் பாராட்டும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்,
(என்றவாறு).