Kural 991
குறள் 991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
yenpathaththaal yeithal yelithaenpa yaarmaatdum
panputaimai yennum valakku
Shuddhananda Bharati
To the polite free of access
Easily comes courteousness.
GU Pope
Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.
Mu. Varadarajan
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செல்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர்.
Parimelalagar
யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.) --
Manakkudavar
(இதன் பொருள்) யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடை மையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர்.