குறள் 99

இனியவைகூறல்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

insol initheenral kaanpaan yevankolo
vansol valangku vathu


Shuddhananda Bharati

Sweet words

Who sees the sweets of sweetness here
To use harsh words how can he dare?


GU Pope

The Utterance of Pleasant Words

Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?


Mu. Varadarajan

இனிய சொற்கள்‌ இன்பம்‌ பயத்தலைக்‌ காண்கின்றவன்‌, அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன்‌ கருதியோ?


Parimelalagar

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்-பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல்-அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி?
விளக்கம்:
('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான், அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப் பயனை நோக்கியோ ?
(என்றவாறு).