குறள் 100

இனியவைகூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

iniya ulavaaka innaatha kooral
kaniiruppak kaaikavarndh thatrru


Shuddhananda Bharati

Sweet words

Leaving ripe fruits the raw he eats
Who speaks harsh words when sweet word suits.


GU Pope

The Utterance of Pleasant Words

When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.


Mu. Varadarajan

இனிய சொற்கள்‌ இருக்கும்போது அவற்றைவிட்டுக்‌ கடுமையான சொற்களைக்‌ கூறுதல்‌ கனிகள்‌ இருக்கும்போது காய்களைப்‌ பறித்துத்‌ தின்பதைப்‌ போன்றது.


Parimelalagar

இனிய உளவாக இன்னாத கூறல்-அறம் பயக்கும்-இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று-இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
விளக்கம்:
('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.) --


Manakkudavar

(இதன் பொருள்) பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்களின்பத்தைத் தருத லைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல்; பழ முங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன் பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து,
(என்றவாறு).