குறள் 101

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

seiyaamal seitha uthavikku vaiyakamum
vaanakamum aatrral arithu


Shuddhananda Bharati

Gratitude

Unhelped in turn good help given
Exceeds in worth earth and heaven.


GU Pope

The Knowledge of Benefits Conferred - Gratitude

Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid.

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.


Mu. Varadarajan

தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு ஆக முடியாது.


Parimelalagar

செய்யாமல் செய்த உதவிக்கு= தனக்கு முன்னோர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும் வானகமும் ஆற்றல் அரிது= மண்ணுலகும் விண்ணுலகுங் கைமாறாகக் கொடுத்தாலும் ஒத்தல்அரிது.
விளக்கம்:
கைம்மாறுகள் எல்லாம் காரணம் உடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி'யென்று பாடமோதி, மறித்து உதவமாட்டாமை உள்ளவிடத்துச் செய்த உதவி என்று உரைப்பாரும் உளர்.


Manakkudavar

செய்ந்நன்றியறிதலாவது பிறர் செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை. (இதன் பொருள்) முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலக முஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது,
(என்றவாறு).