குறள் 102

செய்ந்நன்றி அறிதல்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

kaalaththi naatrseitha nanri sirithaeninum
gnyaalaththin maanap paerithu


Shuddhananda Bharati

Gratitude

A help rendered in hour of need
Though small is greater than the world.


GU Pope

The Knowledge of Benefits Conferred - Gratitude

A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.

A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.


Mu. Varadarajan

உற்ற காலத்தில்‌ ஒருவன்‌ செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும்‌, அதன்‌ தன்மையை ஆராய்ந்தால்‌ உலகத்தைவிட மிகப்‌ பெரிதாகும்‌.


Parimelalagar

காலத்தினால் செய்த ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக் கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது-தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.
விளக்கம்:
(அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)


Manakkudavar

(இதன் பொருள்) உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான் சிறிதா யிருந்த தாயினும், உலகத்தினும் மிகப் பெரிது,
(என்றவாறு). இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.