குறள் 988

சான்றாண்மை

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

inmai oruvatrku ilivanru saalpaennum
thinmaiun taakap paerin


Shuddhananda Bharati

Sublimity

No shame there is in poverty
To one strong in good quality.


GU Pope

Perfectness

To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.

Poverty is no disgrace to one who abounds in good qualities.


Mu. Varadarajan

சால்பு என்னும்‌ வலிமை உண்டாகப்‌ பெற்றால்‌ ஒருவனுக்குப்‌ பொருள்‌ இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.


Parimelalagar

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப் பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது
விளக்கம்:
(தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார் சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.) சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். ''பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'' (புறநா. 350) என்றார் பறிரும். ஏகதேச உருவகம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்குச் சால்பாகியநிலை உண்டாகப் பெறின், பொரு ளின்மை இளிவாகாது, (எ - ற). இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.