Kural 987
குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
innaasei thaarkkum iniyavae seiyaakkaal
yenna payaththatho saalpu
Shuddhananda Bharati
Of perfection what is the gain
If it returns not joy for pain?
GU Pope
What fruit doth your perfection yield you, say!
Unless to men who work you ill good repay?
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
Mu. Varadarajan
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?
Parimelalagar
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? சிறப்பு உம்மை அவர் இன்னா செய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை, வினா, எதிர்மறிப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனிய வற்றைச் செய்யாராயின், அச்சால்பு வேறென்ன பயனையுடைத்து,
(என்றவாறு). 8