குறள் 986

சான்றாண்மை

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

saalpitrkuk katdalai yaathaenin tholvi
thulaiyallaar kannum kolal


Shuddhananda Bharati

Sublimity

To bear repulse e'en from the mean
Is the touch-stone of worthy men.


GU Pope

Perfectness

What is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned.

The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.


Mu. Varadarajan

சால்புக்கு உரைகல்போல்‌ மதிப்பிடும்‌ கருவி எது என்றால்‌ தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்‌ தோல்வியை ஏற்றுக்‌ கொள்ளும்‌ பண்பாகும்‌.


Parimelalagar

சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துரை அல்லார் கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல்.
விளக்கம்:
(துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்,
(என்றவாறு).