குறள் 985

சான்றாண்மை

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

aatrruvaar aatrral panithal athusaannor
maatrraarai maatrrum patai


Shuddhananda Bharati

Sublimity

Humility is valour's strength
A force that averts foes at length.


GU Pope

Perfectness

Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.

Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.


Mu. Varadarajan

ஆற்றலுடையவரின்‌ ஆற்றலாவது பணிவுடன்‌ நடத்தலாகும்‌. அது சான்றோர்‌ தம்‌ பகைவரைப்‌ பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்‌.


Parimelalagar

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.
விளக்கம்:
(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்; சான்றோர் தம் பகைவரை ஒழிக்கும் கருவியும். அதுவே,
(என்றவாறு).