Kural 984
குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
kollaa nalaththathu nonmai pirartheemai
sollaa nalaththathu saalpu
Shuddhananda Bharati
Not to kill is penance pure
Not to slander virtue sure.
GU Pope
The type of ‘penitence’ is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others’faults.
Mu. Varadarajan
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
Parimelalagar
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம்.
விளக்கம்:
(நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டாயினும், கொல்லாத நலத்தையுடையது தவம்; அதுபோல், சான்றாண்மைக்கு உறுப்பான நற்குணங் கள் பல உண்டாயினும், பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு. 2