Kural 983
குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்
anpunaan oppuravu kannotdam vaaimaiyodu
aindhthusaal oonriya thoon
Shuddhananda Bharati
Love, truth, regard, modesty, grace
These five are virtue's resting place.
GU Pope
Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place.
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
Mu. Varadarajan
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
Parimelalagar
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு - யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு - எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து.
விளக்கம்:
(எண் 'ஓடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.)
Manakkudavar
(இதன் பொருள்) அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண் ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங் கும் தூண்,
(என்றவாறு). இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது.